Asianet News TamilAsianet News Tamil

தொழிலாளர்களுக்கு இனி மின்னணு முறையில்தான் சம்பளம்….மத்தியஅரசு முடிவு…

parliment
Author
First Published Dec 21, 2016, 2:10 PM IST


தொழிலாளர்களுக்கு இனி மின்னணு முறையில்தான் சம்பளம்….மத்தியஅரசு முடிவு…

கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிக்கும் வகையில் உயர் மதிப்பு கொண்ட பணம் செல்லாது என பிரதமர் அறிவித்தார். அதே நேரத்தில் இப்பிரச்சனையை முழுமையாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மின்னணு முறையில் நடத்தும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

 மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனை செயல்படுத்தும் வகையில் மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மின்னணு முறையில் சம்பளத்தை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

தொழிலாளர்களின் ஊதியத்தை செக், ஆன்லைன் முறையில் வழங்க இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. தொழிலாளர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்கக் கூடாது என்றும், தொழில் நிறுவன ஊழியர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்றும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணைய வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


 

 

Follow Us:
Download App:
  • android
  • ios