நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதிவரை நடக்கிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. ஜூலை 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ம் தேதி பதவி ஏற்பார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 12ம் தேதிவரை நடக்கிறது.
கூட்டத்தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. ஜூலை 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ம் தேதி பதவி ஏற்பார்.

மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்கும் போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலும் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடந்து ஆகஸ்ட் 11ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவி ஏற்பார்.
இந்தமுறை மழைக்காலக் கூட்டத்தொடரை 18 அமர்வுகளாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதிவரை 18 அமர்வுகள் நடத்தப்படஉள்ளன.
ராஜஸ்தான் டெய்லர் கொலை விவகாரம்... அவரது குடும்பத்துக்கு முதல்வர் கொடுத்த வாக்கு என்ன தெரியுமா?
இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முக்கியமாக, மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கையில்எடுக்கும். இதற்கு பதிலடியாக ராஜஸ்தானில் டெய்லர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுக்கும்.

மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் கூட்டணி உடைந்து, பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்கிறது.இதனால் கூட்டத்தொடரில் சிவசேனா எம்.பி.க்கள் கடுமையாக மத்தியஅரசின் திட்டங்களை எதிர்பார்ப்பார்கள். மகாராஷ்டிராவில் குதிரைப்பேரத்தில் ஈடுபட்டு மகாவிகாஸ் அகாதி அரசைக் கவிழ்த்த பாஜகவை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும்.
மத்திய அரசு விசாரணை அமைப்புகளை கைப்பாவையாகப் பயன்படுத்தி தலைவர்களை துன்புறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும். குறிப்பாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அமலாக்கப்பிரிவு 3 முறை விசாரித்துள்ளது.இந்த விவகாரத்தை காங்கிரஸ் அவையில் எழுப்பும்.
அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது: 2,750 பக்தர்கள் குகைக் கோயிலுக்கு புறப்பட்டனர்
இது தவிர விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை, டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிவு, நாட்டின் பொருளாதார சூழல் ஆகியவற்றையும் எதிர்க்கட்சிகள் எழுப்பும்.
மத்திய அரசு 25 மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளது. குறிப்பாக தனிநபர் டேட்டா பாதுகாப்பு மசோதா, சட்டவிரோத நடவடிக்கை திருத்த மசோதா, இடைத்தரகர் மசோதா, வனவிலங்கு பாதுகாப்புச்சட்டத் திருத்தம், மூத்தகுடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன் மசோதா, கிரிப்டோகரன்ஸி மசோதா ஆகியவை கிடப்பில் உள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு வேகம்காட்டும்.

கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடர் பெரும் அமளியில் முடிந்தது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு செயலி குறித்து மத்திய அரசு விவாதம் நடத்த அனுமதிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் போராட்டம், விலைவாசிஉயர்வு, பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஆகியவற்றையும் எதிர்க்கட்சிகள்எழுப்பினர்.
கடந்த 20 ஆண்டுகளலி் 2021, மழைக்காலக் கூட்டத்தொடர்தான் குறைந்த செயல்திறன் கொண்ட கூட்டமாகும், அதாவது 21சதவீதம்தான் ஆக்கப்பூர்வமாக கூட்டம் நடந்தது. மாநிலங்களவை 28சதவீதம் மட்டுமே ஆக்கப்பூர்மாக கூட்டம் நடந்தது. கடந்த 1999ம் ஆண்டுக்குப்பின் 8-வது குறைந்த செயல்திறன் கொண்ட கூட்டத்தொடராகும்.
