பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற குளரிகால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியுள்ளன.
இந்நிலையில் இன்று மீண்டும் அவை கூடியதும், மக்களவையில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும். பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி எதிர்கட்சிகள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கூச்சலிட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சியினர் கோஷ்களை எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பமும் நிலவியது. இதனால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
