செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டம் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.
ரூபாய் நோட்டு விவாகரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் கடந்த 3 நாட்களாக பெரும் அமளி ஏற்பட்டு வருகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இன்று 4வது நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தற்போது டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், பாஜ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நடத்தப்படும் அனைத்து கட்சி கூட்டத்தில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் கலந்து கொள்கின்றன.
