Parents release in Aarushi murder case

சிறுமி ஆருஷி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ், நுபுர் தல்வார் ஆகியோரை அலகாபாத் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார் என்ற 14 வயது சிறுமி, வீட்டு வேலை செய்பவர் ஹேம்ராஜ் ஆகியோர் மர்மமான முறையில் இறந்தனர்.

இந்த கொலைக்கு ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பில், ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ், நுபுர் ஆகிய இருவருக்கும் 2013 ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் மீது, சிபிஐ குற்றம் சாட்டி இருந்தது. அதாவது தங்களின் ஒரே மகளான ஆரூஷி மற்றம் வேலைக்காரர் ஹேமராஜை கொலை செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது. 

இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனு மீதான இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோரை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.