ஐம்முவில் ஊடுறுவிய தீவிரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையை அதிகாலை நடந்து கடுமையான துப்பாக்கிச்சண்டையில் ஒரு தீவிரவாதி  சுட்டுபடைகொலை செய்யப்பட்டுள்ளான்.

காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்குப்பிறகு, அங்கு பதற்றமான சூழல்நிலவி வருகிறது, இந்நிலையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் அங்கு கைவரிசை காட்ட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் உதவியுடன் எல்லையில் தீவிரவாதிகளும் ஊடுறுவும் முயற்ச்சிகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் குழுவாக பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அந்த தகவலின் அடிப்படையில்  இந்திய பாதுகாப்புப் படைவீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

அப்போது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தங்கி இருக்கும் இடத்தை நெருங்கியதும் அவர்கள் பாதுகாப்பு படைவீரர்களை நோக்கி கடுமையாக சுடத்தொடங்கினர். அந்த தாக்குதல் பலமணி நேரம் நீடித்தது.ஆனாலும் இந்திய பாதுகாப்பு படைவீரர்களின் தொடுத்த பதில் தாக்குதலை  தாக்குபிடிக்க முடியாமல்  தீவிரவாதிகள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர், அப்போது ஒரு தீவிரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான். இதில் ஒரு பாதுகாப்பு படை வீரரும் காயமடைந்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகள் வசமிருந்த ஆயுதங்கள், மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இன்னும் பல தீவிரவாதிகள் குழுக்கலாக பிரிந்து பதுங்கி இருக்கக் கூடும் என்ற தகவலால்,  பாதுகாப்பு படை வீரர்களின்   தேடுதல் வேட்டை தொடர்கிறது.