பாகிஸ்தான் நடிகர்களை வெளியேறச் சொல்வது தேவையற்ற ஒன்று என உத்திரப்பிரதேச மாநில முதல் அமைச்சர் அகிலேஷ்யாதவ் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது நல்ல நடவடிக்கைதான் என்றாலும், அது நிரந்தர தீர்வை தராது. ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண முடியும். பாகிஸ்தான் நடிகர்களை வெளியேறச் சொல்வது தேவையற்ற ஒன்று. கலையுலகை சேர்ந்தவர்களுக்கு சாதி, மதம் ஏதும் இல்லை என்றார்.