ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறுவதும் பதிலுக்கு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதும் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாகி போய் விட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று நள்ளிரவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி  துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லை அருகே உள்ள ரஜோரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். 

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதலையடுத்து இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 23 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், 9 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.