மீண்டும், மீண்டும் அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவம்….இந்திய வீரர் வீர மரணம்….

காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியானார்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே நேற்று  மாலை முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் இந்திய நிலையை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

பதிலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் நிலைகளை தாக்கினர்.இரு தரப்புக்கும் பல மணிநேரங்களாக சண்டை தொடர்ந்து நடைபெற்றது.

பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெயத்ராத் சிங் என்ற இந்திய வீரர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலால் 9 வீரர்கள் உள்ளிட்ட 11 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.