Padma Vati film actress Deepika Padukone gets Rs. 10 crores will be awarded
பத்மாவதி திரைப்பட நடிகை தீபிகா படுகோனே தலையைக் கொண்டு வந்தால் ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என்று அரியானா மாநில பாஜக தலைவர் அறிவித்திருந்தார். இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? என்றும், கிடைக்கும் பணத்திற்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுமா? என்றும் பிரபல நடிகை கேள்வி கேட்டுள்ளார்.
வெளியீடு நிறுத்தம்
ராஜஸ்தான் மாநிலத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக கொண்டு பத்மாவதி என்ற திரைப்படம் இந்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் ராணியின் வரலாற்றை திரித்துக் கூறியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள ராஜஸ்தான் அமைப்புகள், படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் கடந்த 1-ந்தேதி படம் வெளியாகவிருந்த நிலையில், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தலைக்கு விலை
இதற்கிடையே, படத்தில் நடித்த தீபிகாவின் படுகோனேவின் மூக்கை அறுப்போம் என வலது சாரி இந்துத்துவ அமைப்புகள் கூறியிருந்தன. இதேபோன்று, அரியானாவை சேர்ந்த பாஜக தலைவர் சூரஜ் பால் அமு, தீபிகாவின் தலையை வெட்டினால் ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், பத்மாவதி விவகாரம் குறித்து பிரபல நடிகை டுவிங்கிள் கன்னா கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது-
பரிசுத் தொகை விவரங்கள்
இந்தியாவில் பிரபலங்களுடைய உடல் உறுப்புகளுக்கு தொகை அறிவிப்பதில் சிலர் மும்முரமாக உள்ளனர். சமீபத்தில் கமல் ஹாசனின் முகத்தில் மையை தெளித்தால் ரூ. 25 ஆயிரம், பரூக் அப்துல்லாவின் நாக்கை வெட்டினால் ரூ. 21 லட்சம், லாலு பிரசாத் யாதவின் மகனுடைய கன்னத்தில் அறைந்தால் ரூ. 1 கோடி வழங்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த வரிசையில் ஒருவர் மிகப்பெரும் தொகையை அறிவித்திருக்கிறார். அது `பத்மாவதி' பட நாயகி தீபிகாவின் தலையை வெட்டினால் ரூ. 10 கோடி பரிசாக வழங்கப்படும் என்று அரியானா பாஜக தலைவர் சூரஜ்பால் அமு கூறியுள்ளார்.
கலவரம் வெடிக்கும்
இங்கு ஒரு பசு மாட்டின் முகத்தில் மையை தெளித்தாலோ, அல்லது அதனுடைய ஏதாவது ஒரு உறுப்பை வெட்டினாலோ நாடு முழுக்க கலவரம் வெடித்து விடும். ஆகையால், இப்போதெல்லாம் மனித உறுப்புகளை வெட்டுவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
`நகைச்சுவை உணர்வு எனக்கு இல்லையென்றால் நான் என்றைக்கோ தற்கொலை செய்திருப்பேன்' என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார். அது நிச்சயமாக ஏற்கக் கூடிய கருத்தாகும். இங்கு நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நாடு இருக்கும் பொருளாதார மோசமான நிலையில் 10 கோடி ரூபாயை பரிசு தருவதாக சூரஜ் பால் அமு அறிவித்துள்ளார்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
அந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை அந்த பணிக்கு நான் விண்ணப்பித்தால், அவர் அறிவித்திருக்கும் ரூ. 10 கோடிக்கு ஜி.எஸ்.டி. வரி உ?ண்டா என்பதையும் அவர் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு டுவிங்கிள் தனது கட்டுரையில் கூறியுள்ளார். அவரது கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
