Asianet News TamilAsianet News Tamil

மோகன் பாகவத், ஜெ.பி.நட்டா யார்..? பிரதமர் மோடி உறுதியளிப்பாரா..? ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சுக்கு ஓவைசி பதிலடி..

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மோகன் பாகவத் பேச்சை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

Owaisi responds on Mohan Bhagwat's 'why look for shivling' comment about Gyanvapi issue
Author
India, First Published Jun 4, 2022, 12:46 PM IST

ஞானவாபி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள் என்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரின் முன்னோர்களும் இந்துக்களே என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்த கருத்து, அரசியல் தளத்தில் பெரும் முக்கியத்த்துவமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி மோகன் பாகவத் பேச்சை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், ஓவைசி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

1. மோகன் பகவத் பாபர் மசூதி இடிப்பு பற்றி ஒருமுறை பேசுகையில், வரலாற்றுக் காரணங்களுக்காக அது தேவைப்பட்டது என்று சொல்லியிருந்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆர்எஸ்எஸ் பாபர் மசூதியை இடித்ததற்கு அவர் அளித்த விளக்கம் அது. அப்படியென்றால் ஞானவாபி மசூதி பிரச்சினையிலும் இதையே செய்ய மாட்டார்கள் என்று என்ன உறுதி?

2.ஞானவாபி மசூதி சர்ச்சை போன்ற சர்ச்சைகளில் இத்தகைய உறுதிகளை அள்ளி வீச மோகன் பாகவத், ஜெ.பி.நட்டாவுக்கு என்ன தார்மீக அதிகாரம் இருக்கிறது. அரசியல் சாசன பொறுப்பில் உள்ள பிரதமர் தானே தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். 1991 சட்டத்தை நாங்கள் மதிக்கிறோம் என்று அவர் சொல்லட்டும். அப்போதுதான் இந்துத்துவாதியினர் எல்லாவற்றையும் நிறுத்துவர்.

3. விஎச்பி உருவாகும் வரை அயோத்தி சர்ச்சை எழவே இல்லை. 1989ல் பாஜக ஒரு தீர்மானத்தின் மூலம் அயோத்தி சர்ச்சையை எழுப்பியது. ஆர்எஸ்எஸ் இரட்டை நாக்குடன் தான் எப்போதும் பேசியுள்ளது. இப்போது ஞானவாபி, காசி, மதுரா, குதுப் மினார் சர்ச்சைகளை எழுப்புவோர் அனைவருமே ஆர்எஸ்எஸ் சார்புடையவர்கள் தான்.

4. எல்லாவற்றையும் துறப்பது போல் காட்டிக் கொள்வது பழைய சங்க பரிவார தந்திரம். தேவையென்றால் கொண்டாடுவார்கள். இல்லாவிட்டால் சீந்தமாட்டார்கள். கோட்ஸே, சாவர்கர் உதாரணங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

5. பாபர் மசூதி போராட்டத்தின்போது கூட சிலர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றுவோம் என்றனர். இன்னும் சிலர் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றனர். இது உணர்வுகள் சார்ந்தது என்றனர்.

6. சிலர் பாபர் மசூதி போதும் வேறெதவும் தேவையில்லை என்றனர். இன்னும் சிலர் அயோத்தி, காசி, ஞானவாபி, மதுரா தவிர வேறேதும் வேண்டாம் என்றனர். வேறு சிலர், முகலாய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மசூதிகள் மட்டுமே எங்களின் கவனம் என்றனர். ஆனால், தெலங்கானா பாஜக தலைவர் சஞ்சய் பண்டாரியோ மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மசூதியையும் தோண்டுவோம் என்று கூறுகிறார். அவர்கள் வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை.

7. இன்று நீதிமன்ற பேச்சைக் கேட்போம் எனக் கூறும் மோகன் பாகவத் பாபர் மசூதி தீர்ப்பில் அப்படி நடந்ததா என்று சொல்ல வேண்டும். ஆயிரக்கணக்கானோர் மசூதியை இடித்தனரே! அத்வானி அதை துக்கமான நாள் என்றார். ஆனால் ஃபட்நவிஸ் இன்றுவரை அதை கொண்டாடுகிறார்.

8. சங்க பரிவாரத்தினர் பாகவத், மோடி பேச்சுகளை கேட்பதில்லை. அந்தக் காலம் கடந்துவிட்டது. பாகவத்தும், மோடியும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தனர். ஆனால் அதன்பிறகு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டனவா? அண்மையில் ராம் நவமி ஊர்வலத்தில் கூட முஸ்லிம்கள் தாக்கப்பட்டனரே?

9. இஸ்லாம் மதம் வெளியில் இருந்து படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர்களால் இந்தியாவில் பரவியது எனக் கூறுகிறார். ஆனால் உண்மையில் இஸ்லாம் இந்தியாவுக்குள் வணிகர்கள், சான்றோர்கள், புனிதர்கள் வாயிலாகவே வந்தது. கட்டாய மதமாற்றம் என்பது பொய். பாகவத்திடம் தான் பிரச்சினை உள்ளது. நவீன இந்தியாவில் வாழ்வோர் அனைவருமே இந்தியர்கள் தான். அவர்களின் மூதாதையர் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாம்.

10. பாகவத்துக்கு எப்போதுமே முஸ்லிம்களின் மூதாதையர்கள் இந்துக்கள் என்று நிரூபிப்பதில் தான் அதிக அக்கறை. அப்படியென்றால் நாம் எல்லோரும் 65,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை ஆராய வேண்டும். அப்போதுதான் இந்தியர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களா அல்லது கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ஈரானில் இருந்து வந்தவர்களா என்பது தெரியவரும் என்று தந்து ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ஒவ்வொரு மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள்..? முஸ்லீம்களும் இந்துக்களே.. ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு..

Follow Us:
Download App:
  • android
  • ios