இந்தியா கூட்டணி என்றால் என்ன.? பதில் தெரியாமல் முழித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் - வைரல் வீடியோ
எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இந்தியா கூட்டணியை முழு வடிவில் சொல்ல முடியாமல் திணறி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. நாடு முழுவதிலுமுள்ள 26 எதிர்க்கட்சிகள் இணைந்து, பாஜகவுக்கு எதிரான அணியை அமைத்திருக்கிறார்கள். இந்த அணிக்கு, I.N.D.I.A - Indian National Developmental Inclusive Alliance எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்த அணியை நிர்வகிக்க, 11 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என பல அறிவிப்புகள் வெளியாகியது. இந்தியா கூட்டணி என்பது இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று பொருள்படும். ஆனால், எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள பல தலைவர்களுக்கு, குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய கூட்டணியின் முழு வடிவம் தெரியவில்லை.
காங்கிரஸ் தலைவர்கள் அகிலேஷ் பிரசாத் சிங், பிரமோத் திவாரி, நசீர் உசேன், சமாஜ்வாதி கட்சி தலைவர் எஸ்டி ஹசன், ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஹர்பஜன் சிங், சிபிஐ தலைவர் பினாய் விஸ்வம் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் சிலர் இந்தியாவில் பாஜகவை தோற்கடிக்க உருவாக்கப்பட்டது என்று கூறினார்கள். அதுமட்டுமில்லாமல், இந்தக் கேள்வியைக் கேட்ட நிருபரிடம் கோபத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
ஆனால் அவர்களால் சொல்ல முடியவில்லை. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் எதிர்கட்சி தலைவர்களை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கிடையில், எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜேடியு, ஆம் ஆத்மி, சமாஜ்வாட், திமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 26 கட்சிகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் பாட்னாவில் ஏற்கனவே இரண்டு முறை கூடியுள்ளன. இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
5 லட்சம் முதலீடு செய்தால் 10 லட்சம் கிடைக்கும்.. இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்