கருப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் தங்களது கைகளில் இருப்பு வைத்துள்ள பழைய பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வங்கிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பணத்தை எடுக்க வேண்டியிருப்பதால் பொதுமக்கள் இது வரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எனவே மத்திய அரசின் இந்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றம் எதிரே உள்ள காந்தி சிலை முன்பு எதிர்கட்சிகளான திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுடபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, கனிமொழி, வேணுகோபால், நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.