ஒரே நாடு ஒரே நேரம்! புதிய IST நேர விதிகளை வெளியிட்ட மத்திய அரசு!
நாடு முழுவதும் நேரக் கண்காணிப்பு நடைமுறைகளை தரப்படுத்துவதற்கான முயற்சியாக, அரசாங்கம் சட்ட அளவியல் (இந்திய தரநிலை நேரம்) விதிகள், 2024 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேரக் கண்காணிப்பு நடைமுறைகளை தரப்படுத்துவதற்கான முயற்சியாக, அரசாங்கம் சட்ட அளவியல் (இந்திய தரநிலை நேரம்) விதிகள், 2024 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைத்து அதிகாரப்பூர்வ மற்றும் வணிக தளங்களிலும் இந்திய தரநிலை நேரத்தை (IST) பிரத்யேக நேர குறிப்பாக பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது.
இதற்கான வரைவு விதிகள் நுகர்வோர் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. பிப்ரவரி 14 வரை இந்த விதிகள் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள விதிகளின்படி, வணிகம், போக்குவரத்து, சட்ட ஒப்பந்தங்கள், பொது நிர்வாகம் மற்றும் நிதி நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் IST கட்டாய நேர குறிப்பாக இருக்க வேண்டும். பொது நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் IST நேரத்தைக் குறிப்பிடுவது அவசியம். துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய இதனைக் கடைப்பிடிப்பது கட்டயாம் ஆக்கப்படுகிறது.
ஜியோவின் புதிய 'சவுண்ட் பே' அம்சம் அறிமுகம்! எதற்காக தெரியுமா?
இந்த முயற்சி தொலைத்தொடர்பு, வங்கி, பாதுகாப்பு மற்றும் 5G மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புத் துறைகளில் நேர துல்லியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் அரசுத் துறைகளில் நானோ செகண்ட் துல்லியத்தைப் பின்பற்றுவதற்கும் அரசு முயல்கிறது.
இந்த வரைவு, IST அல்லாத பிற நேரக் குறிப்புகளை அதிகாரபூர்வ மற்றும் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது. வானியல், நேவிகேஷ் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற சிறப்புத் துறைகளுக்கு மட்டும் விதிவிலக்குகள் கிடைக்கும். அவையும் அரசாங்க ஒப்புதலுக்கு உட்பட்டவை. விதிகளை மீறும்போது அபராதம் விதிக்கப்படும். மேலும் அவ்வப்போது தணிக்கையும் நடைபெறும்.
நுகர்வோர் விவகாரத் துறை, தேசிய இயற்பியல் ஆய்வகம் மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த வரைவு விதிகள் துறைகள் முழுவதும் IST இன் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிறது. இந்தியா முழுவதும் சீரான நேரக் கணக்கீட்டை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இந்த விதிகள் அமைந்துள்ளன.
பொதுமக்கள் பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் வரைவு குறித்த தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலை கேட்ட மூதாட்டிக்கு தங்கக் கம்மல் பரிசாகக் கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!