Asianet News TamilAsianet News Tamil

உ.பி.யில் பரபரப்பு... ஆண் குழந்தை பிறக்கவில்லை... பெண்ணை நடுரோட்டில் தாக்கிய குடும்பம்...!

நாங்கள் இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

On Camera, UP Woman Beaten By In-Laws For Having Daughters
Author
Uttar Pradesh, First Published Jun 4, 2022, 1:19 PM IST

உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மஹோபா மாவட்டத்தில் உள்ள பெண்ணை அவரது கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டு கொடூரமாக தாக்கப்பட்டு இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததற்காக இந்த பெண் தாக்கப்பட்டார் என போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. ஆனால் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டும் பெண் குழந்தைகள். பெண் குழந்தைகள் பிறந்த காரணத்திற்காக எனது கணவர் மற்றும் மாமியார் வீட்டை சேர்ந்தவர்கள் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். 

தொடர்ந்து துன்புறுத்தல்:

“ஆண் குழந்தை பெற்றெடுக்கவில்லை என கூறி எனது கணவர் மற்றும் மாமியார் வீட்டை சேர்ந்தவர்கள் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததை அடுத்து என்னை அதிகளவு துன்புறுத்தி வந்தனர்,” என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். 

பெண் குழந்தை பிறந்ததால், என் கணவர் குடும்பத்தினர் பலமுறை எனக்கு உணவு கொடுக்காமல் பட்டினி கிடக்க வைத்தனர். இதன் காரணமாக நான் கூலி வேலைக்கு போக ஆரம்பித்தேன் என்று அந்த பெண் மேலும் தெரிவித்தார். 

பெண்ணை குடும்பத்தார் சேர்ந்து கொண்டு தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. வீடியோ காட்சிகளின் படி இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டு குழந்தை பெற்றெடுத்த பெண்ணை திட்டி, எட்டி மிதித்து, கைகளால் குத்துகின்றனர். மேலும் அடி வாங்கும் பெண் கதறி அழுது, உதவி கேட்கிறார். 

வழக்குப் பதிவு:

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  மேலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். 

“தாக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நாங்கள் இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று மஹோபா காவல் துறையை சேர்ந்த சுதா சிங் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios