Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் சமூக பரவலாக மாறியது ஒமைக்ரான்... வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. 

omicron virus became community transmission stage in india
Author
India, First Published Jan 23, 2022, 4:04 PM IST

ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட  உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரான்,  குறுகிய காலத்தில்  100 நாடுகளுக்கும் மேல் பரவி ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி தான் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.  ஆனால் கொரோனா வைரஸ் வேகமாக பரவி, தற்போது பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு சமூகப்  பரவலாக மாறியுள்ளதாக இன்சகாக் அமைப்பு தெரிவித்துள்ளது.

omicron virus became community transmission stage in india

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல்,  ஒமைக்ரானின் புதிய மாறுபாடான BA.2 வைரஸ்  நாட்டில் கணிசமான பகுதியிலேயே கண்டறியப்பட்டுள்ளதாகவும்,  இந்த வைரஸ்  வேகமாக பரவுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், இதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அபாயம் தொடர்ந்து நீடித்து வருவதாக எச்சரித்துள்ள இன்சகாக் அமைப்பு, ஜனவரி 3 க்கு பிறகு இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலில் இருப்பதாகவும், டெல்லி மற்றும் மும்பையில் நகரங்களில் அதுவேகமாக பரவி ஒமைக்ரான்  ஆதிக்கம் செலுத்துவதாகவும்  கூறியுள்ளது.

omicron virus became community transmission stage in india

எஸ். ஜென் டிராபைக் கண்டறிய நடத்தும் சோதனையில் ஒமைக்ரான் பாதிப்பை உறுதிசெய்ய முடியாது என்றும் இன்சகாக் அமைப்பு கூறுகிறது. பெரும்பாலும் ஒமைக்ரான் தொற்று ஏற்படுபவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் லேசான பாதிப்புகளே இருப்பதாகவும் இன்சகாக் அமைப்பு கூறியுள்ளது. ஒமைக்ரான் அறிகுறி இல்லாத போதிலும்,  ஐசியூவில் அனுமதிக்கப்படும் ஒமைக்ரான் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios