Asianet News TamilAsianet News Tamil

இவர் யாருன்னு தெரியுமா……புது பைக், வீடு, மனைவி.... என ‘கலக்கும் ஒடிசா தானா மஜ்கி’…

odissa dana majki
odissa dana majki
Author
First Published Dec 9, 2017, 6:07 AM IST


ஒடிசா மாநிலத்தில் இறந்துபோன மனைவியின் உடலை எடுத்து செல்வதற்கு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராத காரணத்தால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தானா மஜ்கி , புது பைக், வீடு, 2-வது மனைவி என நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார்.

காசநோய்

ஒரிசா மாநிலம், காலாகண்டி மாவட்டம், மேல்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் தானா மாஜ்கி. இவருக்கு 3 மகள்கள். இவரின் மனைவி கடந்த ஆகஸ்ட் மாதம் காசநோயால் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

நடந்து சென்றார்

தனது மனைவியின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராத காரணத்தால் , தனது தோளில் சுமந்தபடி சுமார் 12 கிலோ மீட்டர் நடந்து சென்றார். இவருடன் இவரது மகளும் நடந்து சென்றார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

odissa dana majki

குவிந்த நிதியுதவி

இதைப் பார்த்த பலரும் மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர், பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா ரூ.9 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார். பிரதான் மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் இவருக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டு, தற்போது, புதிய வீட்டில் அவர் வசித்து வருகிறார். தனியார் பள்ளி நிர்வாகம், மஜ்கியின் 3 மகள்களும் இலவச கல்வி அளித்து வருகிறது.

மனைவி கர்ப்பம்

மனைவி இறந்த பின், மறுமணம் செய்துகொண்ட மாஜ்கியின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். பலரது உதவியால் தற்போது மாஜ்கி நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார்.

புது பைக்

இந்நிலையில், சமீபத்தில், ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள ஹோண்டா பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் அந்த பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

வாழ்க்கை மாறிவிட்டது

முதல் மனைவி இறந்தபோது கையில் பணமில்லாமல், ஆம்புலன்ஸ் உதவியைக் கூட பெற முடியாமல், அன்று தனது மனைவியின் உடலை தனது தோளில் சுமந்துகொண்டு மஜ்கி நடந்துசென்றார். இன்று, புது பைக், வீடு, மனைவி என வாழ்க்கை மாறிவிட்டது என கிராமக்கள் தெரிவிக்கிறார்கள்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios