Asianet News TamilAsianet News Tamil

ஒடிசா பஹாநகா பள்ளிக் கட்டடம் இடிப்பு; காரணம் இதுதான்!!

ஒடிசா கொரமாண்டல் ரயில் விபத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. 
 

Odisha Train accident: govt school demolished used as a temporarily morgue
Author
First Published Jun 9, 2023, 6:02 PM IST

ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்தை அறிந்தவர்கள் யாரும் எளிதாக கடந்து செல்லவும் முடியாது. மறந்து விடவும் முடியாது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் மக்களின் மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் மக்கள் ஒடிசா விபத்து தொடர்பான விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

எப்படி உண்மையில் விபத்து ஏற்பட்டது என்பது குறித்து அரிய ஆவலாக இருக்கின்றனர். விபத்து நடந்தவுடன் மீட்புப் படையினர் உடனடியாக செயல்பட்டு இருந்தாலும், உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. கொத்து கொத்தாக மடிந்து இருந்தனர். டிரக்குகளில், ஆம்புலன்சுகளில் சடலங்களை எடுத்து வந்து வரிசையாக அடுக்கி வைத்து இருந்தனர். சடலங்க்ளுக்குள் சென்று தனது மகனை தேடிய தந்தையின் வீடியோ மனதை உருக்கியது. இப்படி பல வடுக்களை இந்த ரயில் விபத்து விட்டுச் சென்றுள்ளது. 

உயிரிழந்தவர்களின் உடல்கள் பஹாநகா உயர்நிலைப்பள்ளியில் அடுக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூன் இரண்டாம் தேதி பள்ளியில் இருந்து அனைத்து சடலங்களும் வேறு மருத்துவமனைகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பள்ளி இடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை அருகில் இருந்து பள்ளி மேலாண்மை கமிட்டி, பொதுப்பணித்துறை இரண்டும் கவனித்துக் கொண்டன. இந்தப் பள்ளிகட்டடத்துக்கு வயது 65 ஆண்டுகள்.

ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!

Odisha Train accident: govt school demolished used as a temporarily morgue

பள்ளி கட்டடத்தின் வயது மற்றும் சிறுவயது குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுவதை முன்னிட்டு பள்ளி மேலாண்மை கமிட்டி இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் மனதை உருக்கும் சம்பவங்கள் மாணவர்களின் மனதில் வந்து செல்லும் என்பதால் மாணவர்களின் பெற்றோர்களும் இந்த ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. 

ரயிலில் இருந்து புதருக்குள் தூக்கி வீசப்பட்ட இளைஞர் 48 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்பு!

பள்ளி மேலாண்மை கமிட்டியில் எடுக்கப்பட்ட முடிவு இறுதியில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. பின்னர் தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தில் பள்ளியை இடிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கட்டடத்தை இடிப்பதற்கும், பின்னர் மாடல் பள்ளியாக மாற்றுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் பள்ளியில் நூலகம், அறிவியல் லேப், டிஜிட்டல் பள்ளியறை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மாணவர்களின் மனதில் இருந்து பயத்தை போக்குவதற்கு கவுன்சிலிங் நடத்தப்படும் என்றும் மாணவர்களுக்கு இடையே மூட நம்பிக்கைகளை பரப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 200 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 80 க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அடையாளம் காணப்படாமல் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios