Asianet News TamilAsianet News Tamil

திருப்பதிபோல் மாறியது சபரிமலை – பக்தர்கள் கடும் அவதி

now same-thirupathi-crowd-at-sabarimalai
Author
First Published Jan 7, 2017, 12:43 PM IST


ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் முதல் நாளில் இருந்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருப்பார்கள். இதைதொடர்ந்து, 48 நாள் விரதத்தை கடைபிடிக்கும் பக்தர்கள், ஒரு குழுவாக சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருவார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் கார்த்திகை பிறந்தவுடன், தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, ஐயப்பனுக்கு விரதம் இருக்க தொடங்கினர். இதையொட்டி சபரிமாலையில் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு பல்வேறு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

now same-thirupathi-crowd-at-sabarimalai

கடந்த வாரம் மண்டல பூஜை தொடங்கியது. இதைதொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி லட்சக்கணக்கான பக்தர்கள், சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் அமைப்புகள் அன்னதானம் உள்பட அனைத்து உதவிகளையும் பக்தர்களுக்கு செய்தனா. ஆனால், இந்த அண்டு சபரிமலை தேவஸ்தானம் சார்பில், அன்னதானத்துக்கு தடைவிதித்துள்ளது. அன்னதானம் திட்டத்தை தேவஸ்தானம் செய்து வருகிறது.

இந்நிலையில், பக்தர்கள் அதிக நேரம் கத்திருந்து சுவாமியை தரிசனம் செய்வது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டுமே என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால், அதையும் மிஞ்சூம் அளவுக்கு சபரிமலையில், தற்போது பக்தர்கள் காத்து கிடக்கின்றனர்.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை, அங்குள்ள போலீசார் தடுத்து நிறுத்தி கிடங்குகளில் தங்க வைத்தனர். பின்னர், சுமார் 3 மணிநேரத்துக்கு பிறகு, அவர்களை தரிசனம் செய்ய அனுப்பி வைத்தனர். நேற்று இரவு சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சென்ற ஏராளமான பக்தர்கள், இதேபோல் பல மணி நேரம் தங்க வைக்கப்பட்டதால், கடும் சிரமம் அடைந்தனர்.

now same-thirupathi-crowd-at-sabarimalai

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலை மீது ஏறி, சபரி பீடத்தை அடைய சுமார் 4 முதல் 5 மணிநேரம் வரை ஆனது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள், சிரமங்கள் இல்லாமல் சுவாமியை தரிசனம் செய்ய, தேவஸ்தானம் தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுபற்றி எவ்வித ஆலோசனையும் செய்யாமல் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

வழக்கமாக சுவாமியை தரிசனம் செய்த நேரத்தை விட, தற்போது கூடுதல் நேரம் ஆகிறது. இதனால், பெரும் சிரமம் அடைந்தோம் என்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios