உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சனிக்கிழமையன்று பள்ளிக்கு வரும்போது ‘ஸ்கூல் பேக்’குகளை எடுத்து வர தேவையில்லை என்ற புதிய முறையை கொண்டு வர முதல்வர் ஆதித்யநாத் அரசு திட்டமிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா நேற்று முன் தினம் இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று பள்ளி வேலைநாள் வைக்கப்படும்போது, மாணவ,மாணவிகள் தங்களின் ‘ஸ்கூல் பேக்குகளை’ எடுத்துவர தேவையில்லை.

 

இதன் மூலம், மாணவ, மாணவிகள் விருப்பம் போல் பள்ளியில் விளையாடலாம், விருப்பமான ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்து தங்களின் திறமைகளை வளர்க்க இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மேலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவும், மாணவர்களின் ஆளுமை திறனை வளர்க்கவும் இந்த திட்டம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாநில அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சீருடை காக்கி கால்சட்டை, வெள்ளை சட்டை என்று இருந்தது. அதை மாற்றி உத்தரவிட்ட முதல்வர் ஆதித்யநாத், மாணவர்களுக்கு ஜூலை மாதம் முதல், பிங்க் மற்றும்வௌ்ளை கட்டம் போட்ட சடடையும், பிரவுன் வண்ணத்தில் காலரும், பிரவுன்கால்சட்டையும் அணிய உத்தரவிட்டுள்ளார். இதேபோல, மாணவிகளுக்கு பிரவுன்சல்வார்,சிவப்பு குர்தா, பிரவுன் துப்பட்டா  அணியவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஜூலை 1-ந்தேதி முதல் 10ந்தேதிக்குள் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகம், சீருடை, ஷீ, ஸ்கூல் பேக்குகளைவழங்க உத்தரவிட்டுள்ளார்.

காக்கி, வெள்ளை வண்ணத்தில்  இப்போது இருக்கும் சீருடைகள், ‘ஹோம்கார்டு’ போன்று இருந்ததையடுத்து, இதை மாற்ற முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார்.