Nobel Prize for Peace Set for the Icon Framework!
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, ஐகேன் என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் துறைக்கான நோபல் பரிசு கடந்த 4 நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பிரிட்னைச் சேர்ந்த எழுத்தாளர் கசுவோ இசிகுரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசை அக்கமிட்டியின் தலைவர் ரெய்ஸ் ஆண்டர்சன் அறிவித்தார். லண்டனில் இயங்கி வரும் ஐகேன் என்ற அமைப்புக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐகேன் அமைப்பு, அணு ஆயுதத்துக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் ஐகேன் அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
