500 மற்றும் 1000 ருபாய் நோட்டு செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த்தையடுத்து நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைந்துள்ளது. வங்கிகளில் பணம் போடவும், எடுக்கவும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன, இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அதேநேரத்தில் பொது மக்களுக்கு ரிசர்வ் வங்கியும் சில அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது.
அதாவது ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,
அதன்படி 2000 ருபாய் வரை சேவை வரி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.2000 ருபாய் வரை டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளுக்கு சேவை வரி இல்லை என ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள் முலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு 15 கதவீத வரி விதிக்கப்ப்ட்டிருந்த்து குறிப்பிடத்தக்கது,
