no seats for muslims in up
மதநல்லிணக்கம் குறித்து பேசும் பா.ஜ.க. உத்தரப்பிரதேத்தில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு அளிக்காதது ஏன்? என்று காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.
நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் பா.ஜ.க.வுக்கு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.இதனை அக்கட்சி கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், அதே வெற்றியை விமர்சனமாக மாற்றியிருக்கிறது காங்கிரஸ்...

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரிஜெஸ் கலப்பா பேசுகையில், "உத்தரப்பிரதேசத்தில் 20 சதவீதம் இஸ்லாமியர்கள் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஒருவருக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மாநிலத்தில் மதநல்லிணக்கம் நிலவுகிறது என்று பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்கின்றனர்".

"உத்தரப்பிரதேச வளர்ச்சிக்காகவே சமாஜ்வாதியும், காங்கிரஸூம் கூட்டணி அமைத்தது. ஆனால் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் எங்களது தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நேரங்களில் தோல்வி மிகச் சிறந்த பாடத்தை அளிக்கும்" இவ்வாறு தெரிவித்தார்....
காங்கிரஸின் இக்குற்றச்சாட்டுக்கு உங்கள் பதிலென்ன மோடிஜி.....
