இனி ஸ்கூலில் மதிய உணவு கிடையாது… கல்வித்துறை திடீர் அறிவிப்பு….
கேரள மாநிலத்தில் இனி பள்ளிகளில் மதிய உணவு தரப்பட மாட்டாது என்று அம்மாநில கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இனி பள்ளிகளில் மதிய உணவு தரப்பட மாட்டாது என்று அம்மாநில கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளாவில் கொரோனா தொற்றுகள் அதிகமாக பரவி வருகின்றன. தொற்று பரவலை மாநில சுகாதாரத்துறை கட்டுப்படுத்த முடிந்தாலும் தொற்றுகள் தினசரி அதிகமாகவே பரவி வருகிறது.
இந் நிலையில் இனி பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு தரப்படமாட்டாது என்று கேரள பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. உணவுக்கு பதில் அதற்கான பணம் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பள்ளிகள் முன்னால் கடைகள் இருந்தால் அங்கு சாப்பிட ஆசிரியர்கள், மாணவர்கள் செல்லக்கூடாது என்று கூறப்பட்டு உள்ளது. ஒரு பெஞ்சில் ஒருவர் அமர அனுமதி, யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.