மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார்.  இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 20-ம் தேதி மக்களவையில் விவாதம் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முதலில் மக்களவை தொடங்கியதும் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை பதவி ஏற்று கொண்டனர். பின்பு பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி., ஜோதிராதித்யா சிந்தியா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். 

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நம்பிக்கையில்லா தீர்மானம் மீது சபாநாயகர் முடிவு எடுக்கவில்லை . இந்நிலையில் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீது 20-ம் தேதி மக்களவையில் விவாதம் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.இதையடுத்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த் குமார், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீது எதிர்கட்சிகளுக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்டின் மக்களுக்கு இந்த அரசின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.