கொல்கத்தாவில் உள்ள ஷாப்பிங்  மாலில் வேட்டி அணிந்து வந்தவரை உள்ளே செல்ல அனுமதிக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பார்க் சர்கஸ் பகுதியில் உள்ளது குவெஸ்ட் மால். இந்த மாலுக்கு வருபவர்கள் யாரும் வேட்டியோ அல்லது கைலியோ அணிந்து வரக்கூடாது என்பது விதிம்முறை. ஆனால், இந்த விதிமுறை மீறினால், அவர்களுக்கு குவெஸ்ட் மாலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படும்.

இந்நிலையில்  ஒருவர் வேட்டி மற்றும் குர்தா அணிந்து அவரது நண்பருடன் குவெஸ்ட் மாலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வேட்டி அணிந்து வந்தவரை தடுத்து நிறுத்தி உங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று பாதுகாவலர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்களுடன் அவர் ஆங்கிலத்தில் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அந்தப் பாதுகாவலர்கள் 'வாக்கி-டாக்கி'யில் யாரிடமோ தொடர்பு கொண்ட பின்பு அவரை உள்ளே அனுமதித்துள்ளனர்.

ஆனால், இந்திய பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்தவருக்கு ஏன், எப்படி குவெஸ்ட் மாலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படலாம் என்று சமூக வலைதளங்களி கேள்வி எழுந்து வருகிறது.