nithyananda nevers care for national issues

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய மூன்று ஆசைகளையும் துறக்க ஆண்டியாவது பழைய காலம்.

ஆனால், அந்த மூன்று ஆசைகளையும் குறைவின்றி நிறைவேற்றிக் கொள்ள, இந்த காலத்தில் கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு துறவி வேஷம்.

அந்த வேடம் அணிந்து கொண்டவர்களுக்கு, எதிலும் பஞ்சமின்றி அனைத்திலும் தன்னிறைவுதான். நித்யானந்தாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

தற்போதைய சூழலில், யானை வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன? எந்த சூழலிம் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஒரே ஜீவன், நித்யானந்தா மட்டுமே.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், பாமர மக்கள் வங்கிக்கும், ஏ.டி.எம் க்கும் நடையாய் நடந்து அவதிப்பட்ட கதை ஒருபக்கம் நடந்து, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழகத்தில் நடக்கும் அரசியல் சதுரங்க வேட்டைகள், அதனால் பின்னுக்கு தள்ளப்படும் மக்கள் நல திட்டங்கள் என மக்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், யாரை பற்றியும், எந்த சூழ் நிலையை பற்றியும் கொஞ்சம் கூட கவலை படாமல் தானுண்டு, தன வேலை உண்டு என்று ஹாயாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார் நித்யானந்தா.

தஞ்சாவூர் பக்கத்தில் சைவ மேடம் ஒன்றை வாங்குவதற்கு பணம் கொடுத்து, அதை தமது ஆட்கள் மூலம் கைப்பற்ற போகும்போது, ஊர் மக்களால் அடித்து விரட்டப்பட்டு, அந்தப் பக்கமே தலை வைத்து படுக்க முடியாத ஒரு வருத்தம்.

புகழ் பெற்ற மதுரை ஆதீனத்தை கைப்பற்ற பணம் கொடுத்து, ஆதீன அரசியல் சாமியாரையே வளைக்க நினைத்தும், இந்து மத அமைப்புகளால் விரட்டி அடிக்கப்பட்ட மனவலி.

எனவே இப்போதெல்லாம், தமது அன்றாட பூஜை, புனஸ்காரம், ஆன்மிக சொற்பொழிவுகளை ஆற்றி, பக்தர்களை வளைத்து பிடிப்பதிலும், கல்லா கட்டுவதிலுமே கவனமாக இருக்கிறார் அவர்.

மற்ற நேரங்களில் "கோபியர் கொஞ்சும் ரமணா..கோபாலா" என பெண்கள் புடை சூழ, கன்னி பூஜை நடத்துவதிலும், கன்னியர் சூழ வலம் வருவதிலும், பிசியாக இருக்கிறார்.

"யாரை ஆண்டியாக்க நீ ஆண்டி வேஷம் போட்டாய்" என்று கிராம புறங்களில் கூறுவார்கள். 

அந்த அளவுக்கு ஆண்டி வேஷம் போடும் அனைவரும், தம்மை தேடி வரும் பசையுள்ள பக்தர்களின் சொத்துக்களை எல்லாம் ஆசிரமத்திற்கு எழுதி வாங்கிக்கொள்வார்கள்.

அந்த வேலையையிலும், பெண் பக்தர்களோடு செல்பி எடுப்பதிலும் நித்யானந்தா முழு நேரத்தையும் செலவிட்டு வருவதாக தகவல்.