’இவனுங்களுக்கு தமிழும் புரிய மாட்டேங்குது, புரியலேன்னா சும்மாவும் இருக்க மாட்டேங்கிறானுங்க. எதையாவது கேஸை (வழக்கு) ஃபைல் பண்ணி வைக்கிறானுங்க. இதுக்கு முன் ஜாமீன் வாங்க ஓடுறதுக்கே டைம் சரியா இருக்குது.’ என்று போலீஸை ‘இவனுங்க, அவனுங்க’ என்று ஒருமையில் பேசி ஒரண்டையை இழுத்திருக்கிறார் நித்யானந்தா. 

நித்தி கோஷ்டி இதுவரையில் எங்கேயெல்லாமோ பஞ்சாயத்துகளை கிளப்பியிருக்கிறது. ஆனால் இப்போது பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே கைவைத்துவிட்டதுதான் தேசிய அளவில் பஞ்சாயத்து ஆகியிருக்கிறது. 

குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த போலீஸ் நித்தி உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் நித்தி தவிர மற்ற இருவரும் பெண்கள். அப்பெண்கள் கைதாகிவிட்டனர் ஆனால் நித்தியோ வேறு ஒரு ‘ரேப் கேஸ்’ விவகாரத்துக்காக எங்கேயோ எஸ்கேப் ஆகி இருப்பதால் இதுவரையில் கண்டு பிடிக்க முடியவில்லை. 

இந்த நிலையில்தான் இந்த வழக்கும் சேர்ந்து நித்தியை துரத்தி துவம்சம் செய்ய துவங்கியுள்ளது. ரேப் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்தியை துரத்தும் புது வழக்கு என்ன தெரியுமா? ஆட் கடத்தல். அதுவும் குழந்தைகள், அதிலும் பெண் குழந்தைகள்.

நித்தியின் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் முன்பு பணியாற்றிய ஜனார்த்தன் சர்மா என்பவர்தான் குஜராத் மாநில போலீஸ் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பில் புகார் கொடுத்து, நித்திக்கு எதிராக இம்மாம் பெரிய வேட்டையை துவக்க வைத்துள்ளார். தனது 3 பெண் பிள்ளைகள் , ஒரு மகன் நான்கு பேரையும் தனக்கு தெரியாமல் குஜராத்துக்கு கடத்தி வந்துவிட்டதாகவும், அவர்கள் தன்னை பார்க்க விடாமல் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும் நித்தி உள்ளிட்டோர் மீது சர்மா புகார் கொடுத்தார். 

குழந்தைகள் விவகாரம், அதிலும் பெண் குழந்தைகள் என்பதால் மளமளவென களமிறங்கிய போலீஸ், அதிரடியாய் அந்த குழந்தைகள் தங்க வைக்கப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தியது. இதில் ஒரு மகன், ஒரு மகள் என மைனர் குழந்தைகள் மீட்டு தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் மேஜர் மகள்கள் இருவரும் அங்கே இல்லை. அதிலும் ஒரு மகளான 19 வயது நித்யானந்திதா (அடேங்கப்பா, நித்தியின் பெயரை முன்னால் செருகி வைத்திருக்கும் அதி தீவிர பக்தை) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். வைரலாகியிருக்கும் அதில், தான் மேஜர், தன்னை சுவாமிகள் கடத்தவில்லை, முழு நினைவுடன் தான் ஆசிரமத்தில் இருக்கிறேன், என் பெற்றோர் சரியில்லாதவர்கள், அவர்களுடன் சென்றால் என் உயிர், மானம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பில்லை! எனும் ரீதியில் வெளுத்திருக்கிறார். 

இந்த நித்யானந்திதா நித்தியின் ஆசிரம இளம்பெண்களின் லீடர் போல் செயல்படுபவர். நித்தியின் சமீப கால  மிக நெருக்கமான சேவகி, பக்தை எல்லாம் இவரே. இவரும், நித்தியும் இணைந்து வழங்கியிருக்கும் பல நெருக்க போஸ்கள் இணையதளத்தை தெறிக்க விடுகின்றன. அதிலும் நித்தியின் இளவரசியாக தன்னை நினைத்துக் கொண்டு நித்யானந்திதா போட்டிருக்கும் ‘Life as his princess' பதிவு செம்ம தூளு. 

நித்யானந்திதாவின் வெறித்தனமான நித்யானந்த மயக்கத்தை கண்டு தெறித்துக் கிடக்கிறது குஜராத் போலீஸ்!
ம்...........,மோடி மாநில போலீஸையே திகைக்க விட்ட பொண்ணுய்யா!