டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளின் மறுசீராய்வு மனு மீதான விசாரணையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைநகர் டெல்லியில், 2012-ஆண்டு  டிசம்பர் 16-ம் ஓடும் பேருந்தில்  மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதில் தொடர்புடைய சிறுவன் ஒருவன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், 2014-ல் ஆண்டு சிறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.