Asianet News TamilAsianet News Tamil

நிர்பயா வழக்கு: குடியரசுதலைவர் கருணைமனுவை நிராகரித்தது எதிரான வழக்கு இன்று விசாரணை!

நிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் 4 பேரில் ஒருவரான வினய் சர்மா தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
 

nirbaya case invertigation today
Author
Mumbai, First Published Feb 13, 2020, 6:49 PM IST

நிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் 4 பேரில் ஒருவரான வினய் சர்மா தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது

nirbaya case invertigation today

ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு தள்ளுபடிச ெசய்யப்பட்டது.

nirbaya case invertigation today

இந்தநிலையில் குற்றவாளிகளில் ஒருவரான தூக்கு தண்டனை கைதி வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் அதனை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனை எதிர்த்து வினய் சர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios