next deputy president
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்து வரும் நரசிம்மன் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் 14-வது துணை குடியரசுத்தலைவராக தற்போது ஹமித் அன்சாரி பதவி வகித்து வருகிறார். 2007-ம் ஆண்டு முதல் அவர் துணை குடியரசுத்தலைவர் பதவியில் இருக்கிறார். அவரது பதவிக் காலம் வரும் ஆகஸ்டு மாதம் நிறைவு பெற உள்ளது.
இதையடுத்து புதிய குடியரசுத்தலைவரை தேர்வு செய்ய ஆகஸ்டு முதல் வாரம் தேர்தல் நடத்தப்படும். ஜூலை மாதம் குடியரசுத்தலைவர் தேர்தல் முடிந்ததும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதற்கிடையே புதிய துணை குடியரசுத்தலைவராக யார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்று டெல்லியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநராக இருக்கும் நரசிம்மனின் பெயரும் துணை குடியரசுத்தலைவர் பதவிக்கான பட்டியலில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட போது எழுந்த பல்வேறு நிர்வாக சிக்கல்களை நரசிம்மன் மிகத் திறமையாக எதிர்கொண்டார்.
இரு மாநில அரசு நிர்வாகத்தையும் சிறப்பாக செயல்பட வைத்தார் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நரசிம்மன் சென்னைப் பல்கலைக்கழகத்தில்இயற்பியலில் பட்டம் பெற்றவர். அரசியல் அறிவியல் மற்றும் சட்டத்தில் பட்டமேற்படிப்பு தொடர்ந்தார்.புது தில்லியில் தேசிய பாதுகாப்புப் படை கல்லூரியில் தமது கல்வியை முடித்து இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார்
