தலித் சமூகத்தை சேர்ந்த திருமணமான புது தம்பதியரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலோரில் கோவில் ஒன்றில் புதிதாக திருமணமான தலித் ஜோடியை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து கோவில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் கோவில் பூசாரி, அந்த குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் அப்பகுதி சேர்ந்த மக்களும், இது ஊர் கட்டுப்பாடு என்பதால் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறி அவர்களை தடுத்தனர். இதனால் பாதிக்கப்பட்ட நபர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கோவில் பூசாரியை கைது செய்தனர்.
புகார் கொடுத்த நபர் பேசுகையில்,” திருமணத்திற்கு பிறகு கோவிலில் தேங்காய் உடைக்க வேண்டும் என்ற விருப்பத்தில் பேரில் இங்கு வந்தோம். நாங்கம் அங்கு சென்ற போது, பூசாரி எங்களை கோவில் வாசலில் நிறுத்தி, தேங்காயை வெளியில் உடைக்க சொன்னார். மேலும் நாங்கள் தலித் சமூகத்தை சேர்ந்ததால் எங்களை கோவிலுக்கு அனுமதிக்க முடியாது என்றும் பூசாரி கூறியதாக தெரிவித்தார்.
மேலும் கிராம மக்கள் சிலரும் பூசாரிக்கு ஆதரவாக பேசி வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். கிராமத்தின் முடிவு என்றும் பூசாரியுடன் வாக்குவாதம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும அங்கிருந்த மக்கள் கூறினர். நாங்கள் பூசாரியிடம் பலமுறை எங்களை அனுமதிக்கும் மாறும் கேட்டோம். ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார். அதன் பிறகு தான் நாங்கள் பூசாரி மீது போலீசில் புகார் அளித்தோம் என்று கூறினார்.
