மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த ராஜீவ் மெகஷிரி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய செயலாளராக ராஜீவ் கவுபா  பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் அந்த பொறுப்பில் அடுத்த 2 ஆண்டுகள் இருப்பார். உள்துறை செயலாளர் பொறுப்பு ஏற்றுள்ள ராஜிவ், உள்நாட்டு பாதுகாப்பு, ஜம்மு,காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களை கையாளுதல், வடகிழக்கு மாநில பிரச்சினைகள், மாவோயிஸ்ட்பிரச்சினைகள்உள்ளிட்டவற்றை சமாளிக்க வேண்டி இருக்கிறது.

கடந்த 1982ம் ஆண்டு பேட்ச்,  ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியானராஜிவ் கவுபா, கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு, சிறப்பு பணி அதிகாரியாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முன், கவுபா, நகர மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் செயலாளராக பணியாற்றி வந்தார்.

முன்னதாக, உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக ராஜிவ் கவுபா பணியாற்றி இருக்கிறார். அரசின் திட்டங்களை மத்திய, மாநிலங்கஅரசுகளில்சிறப்பாகச் செயல்படுத்துவது, கொள்கைகளை வகுப்பது  போன்றவற்றிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

கடந்த 1958ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த ராஜிவ் கவுபா, பாட்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பு முடித்தார். அதன் ஐ.ஏ.எஸ். தேர்வாகி பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்துள்ளார். சமீபத்தில்  ஜார்கண்ட் மாநிலத்தில் 15 மாதங்களாக தலைமைச் செயலாளராக கவுபா இருந்தார்.

மேலும், மத்திய அரசுத்துறைகளில் உள்துறை, பாதுகாப்பு, நிதி , சுற்றுச்சூழல், வனம் ஆகிய பல்வேறு துறைகளில் ராஜிவ் கவுபா பணியாற்றி உள்ளார். சர்வதேச நிதி முனையத்தில் (ஐ.எம்.எப்.) இந்தியாவின் சார்பில் 4 ஆண்டுகள் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.