செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பணப்பற்றாக்குறையைத் தீர்க்க புதிய ரூ.500 நோட்டுகள் அச்சடிப்பது நாச்சிக்கில் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பணம் இம்மாதம் 30-ந்தேதிக்குபின், மக்கள் கைகளில் சரளமாகப் புழங்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், கடந்தமாதம் 8-ந்ததேதி பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் வங்கிகளிலும், தபால்நிலையங்களிலும் கைகளில் உள்ள செல்லாதரூபாய்களை டெபாசிட் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதேசமயம், ரூபாய் எடுப்பதிலும் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.
இந்த செல்லாத ரூபாய்களுக்கு மாற்றாக ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டது. மேலும் புதியரூ.500 நோட்டுகளையும் அச்சடித்து வெளியிட்டது. ஆனால், தற்போது, பெரும்பாலும், ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால், சில்லரை தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது. இதனாால், ரூ.2 ஆயிரம் நோட்டு வைத்து இருப்பவர்களும் அதை மாற்ற முடியாமல் திணறிவருகின்றனர்.
இந்த குறையைப் போக்க ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ரிசர்வ் வங்கிக்க சொந்தமான நாசிக் அச்சகத்தில், ரூ.500 நோட்டு அச்சடிப்பது 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாச்சிக்கில் உள்ள கரன்சி அச்சடிக்கும் அச்சகம்(சி.என்.பி.) வட்டாரங்கள் கூறுகையில், “ நாட்டில் சில்லரை தட்டுப்பாடு இருப்பதைக் கண்டு, ரிசர்வ் வங்கி புதிய ரூ.500 நோட்டுகளை அதிகமாக அச்சடிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த நவம்பர் 10-ந்தேதியில் இருந்து, நாள் ஒன்றுக்கு 35 லட்சம் எண்ணிக்கையில், ரூ. 500 நோட்டுகளை அச்சடித்த நிலையில்,தற்போது, 1 கோடி எண்ணிக்கையில், ரூ.500 நோட்டுகளை அச்சடித்து வருகிறோம்.
அது மட்டுமம் அல்லாமல், நாள் ஒன்றுக்கு 90 லட்சம் எண்ணிக்கையில், ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகளையும் அச்சடித்து வருகிறோம். ஆனால், ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை நாங்கள் அச்சிடுவதில்லை. ரிசர்வ் வங்கிக்கு நேற்று 4.3 கோடி எண்ணிக்கையில், ரூ.500, ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகளை அனுப்பி இருக்கிறோம்.
இதில் 1.1 கோடி ரூ.500 நோட்டுகளாகும், 1.2 கோடி ரூ.100 நோட்டுகள், தலா ஒரு கோடி எண்ணிக்கையில், ரூ.50, ரூ.20 நோட்டுகள் அடங்கும். கடந்த 43 நாட்களில் நாசிக் பிரஸ், 82.80 கோடி எண்ணிக்கையில், பல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சடித்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி இருக்கிறோம்.
இதில் 25 கோடி எண்ணிக்கையில், ரூ. 500 நோட்டுகளாகும். கடந்த 3 நாட்களாக8.3 கோடி எண்ணிக்ையில் பல்வேறு மதிப்பிலான ரூபாய்களை அச்சடித்து அனுப்பி இருக்கிறோம். இதில் 3.75 கோடி எண்ணிக்கையில் ரூ. 500 நோட்டுகளாகும்.
2017ம் ஆண்டு, ஜனவரி 31-ந்தேதிக்குள், 80 கோடி எண்ணிக்கையில், பல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அனுப்ப இருக்கிறோம். இதில் புதிய ரூ.500 நோட்டுகள் பாதி அளவு இருக்கும். அதாவது 40 கோடி எண்ணிக்கையில் இருக்கும்” எனத் தெரிவிக்கின்றன.
ஆனால், இம்மாதம் 31-ந்தேதியில் இருந்து ஏ.டி.எம். வங்கிகளில், புதியரூபாய் நோட்டு கிடைக்குமா என்பது தான் விடை தெரியாத கேள்வியாக அனைவரின் முன் இருக்கிறது.
