Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவை மின்னல் வேகத்தில் தாக்கும் கொரோனா... மீண்டும் பாதிப்பில் 2வது இடத்திற்கு முன்னேறிய தமிழகம்..!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5, 66,840 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிப்பில் மீண்டும் தமிழகம் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

New coronavirus cases in India decline.. again Tamil Nadu to 2nd place
Author
Tamil Nadu, First Published Jun 30, 2020, 11:39 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,66,840 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிப்பில் மீண்டும் தமிழகம் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்திலேயே உள்ளது.

New coronavirus cases in India decline.. again Tamil Nadu to 2nd place

இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கையில்  கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 18,522 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5,66,840 ஆக உயர்ந்துள்ளது. 2,15,125 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,34,822 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 16,893ஆக அதிகரித்துள்ளது. 

New coronavirus cases in India decline.. again Tamil Nadu to 2nd place

இந்தியாவில் பாதிப்பில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் 1,69,883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  7,610 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிப்பில் 3வது இடத்தில் இருந்து வந்த தமிழகம் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 86,224 பேர் பாதிப்பு மற்றும் 1,141 பேர் உயிரிழப்புடன் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. 3வது இடத்தில் உள்ள டெல்லியில் 85,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ,680 பேர் உயிரிழந்துள்ளனர்.  31,938 பாதிப்புடன் குஜராத் 4வது இடத்தில் உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios