புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து பொதுமக்கள் தங்கள் கைகளில் இருப்பு வைத்துள்ள பழைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் தங்களது பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பணத்தை மாற்றி வருகின்றனர்.
தற்போது வரை புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் வந்துள்ளன. புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் புழகத்திற்கு வராததால் போதிய சில்லறை கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்

இதனிடையே, புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று அறிவிக்கப்ட்டிருந்த நிலையில், இன்று முதல் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.
2௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் மட்டும் புழக்கத்திற்கு வந்திருந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றும் ஓரிரு நாட்களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது.
