new 200 rupees
கறுப்புப் பணம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நேரந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அறித்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு நிலவியது. ஏடிஎம்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டர். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் கடுமையான பணத்தட்டுப்பாடு இருந்து வந்ததது.
இந்த பணத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுக்கள் வங்கிகள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை திரும்பப் பெறப்பட்டன.
மோடியில் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொது மக்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். அதே நேரத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.
புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள்வெளியிடப்பட்டாலும் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு நீடிப்பதால் 200 ரூபாய் வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதற்காக மத்திய அரசின் ஒப்புதலை பெறும் நடவடிக்கைகளில்ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது,. மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் 200 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
