புதுவை நெல்லித்தோப்பு சட்டமன்ற இடைத் தேர்தல், வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் முதல்வர் நாராயணசாமி முன்னிலை உள்ளார்.

கடந்த 19ம் தேதி தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுவையில் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்தது.

புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னிலையில் இருக்கிறார்.