நீட் யுஜி தேர்வு 2023-க்கான ஆன்லைன் பதிவு நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

நீட் யுஜி தேர்வு 2023-க்கான ஆன்லைன் பதிவு நாளை முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. நீட் தேர்வு குறித்த அனைத்து தகவல்களும் தேசிய தேர்வு முகைமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான nta.ac.in மற்றும் neet.nta.nic.in -யில் வெளியிடப்படும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா & அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திடீர் ராஜினாமா !! டெல்லியில் பரபரப்பு

இந்த நிலையில் நீட் யுஜி தேர்வு 2023க்கான ஆன்லைன் பதிவு நாளை (மார்ச்.1) முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பு தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் நீட் யுஜி தேர்வு 2023-க்கு பதிவு செய்யலாம். ஆனால் பதிவு தேதி குறித்து தேசிய தேர்வு முகமை இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

இதையும் படிங்க: கனெக்‌ஷன்ஸ் 2023 முன்னாள் மாணவர்கள் மீட்டில் IFFCO IIMCAA விருதுகள் அறிவிப்பு

நீட் யுஜி தேர்வு 2023-க்கு விண்ணப்பிப்பது எப்படி? 

  • தேசிய தேர்வு முகைமையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான nta.ac.in மற்றும் neet.nta.nic.in-க்கு செல்லவும்
  • முகப்புப் பக்கத்தில், NEET UG 2023 பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்
  • NEET UG விண்ணப்பம் 2023க்கான விவரங்களைப் பதிவு செய்யவும்
  • ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள் மற்றும் கையொப்பத்தை குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்றவும்
  • ஆன்லைன் பேமெண்ட் முறையில் கட்டணத்தைச் செலுத்தவும்
  • NEET UG விண்ணப்பப் படிவம் 2023-ஐ சமர்ப்பித்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்
  • ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய, NEET UG 2023 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in-க்குச் செல்ல வேண்டும். 
  • NEET 2023 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து, விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.