Asianet News TamilAsianet News Tamil

தெருக்களில் குப்பை கொட்டி எரிப்பவரா நீங்கள்?... அப்ப அபராதம் கட்ட தயாராகுங்கள்….

national green-tribunal
Author
First Published Dec 23, 2016, 9:47 AM IST


தெருக்களில் குப்பை கொட்டி எரிப்பவரா நீங்கள்?... அப்ப அபராதம் கட்ட தயாராகுங்கள்….

நாடு முழுவதும் திறந்த வெளிகளில் கழிவுகளை தீயிட்டு எரிப்பதற்கு முழுமையான தடை விதித்து பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

சமூக செயற்பாட்டாளர் அல்மித்ரா பட்டேல் உள்ளிட்ட சிலர் திடக்கழிவு மேலாண்மை முறைகளை மேம்படுத்துவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காற்று மாசுபடுவதை தடுக்க திறந்த வெளிகளில் கழிவுகளை தீயிட்டு எரிப்பதற்கு முழுமையான தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதை மீறி யாரேனும் திறந்தவெளி இடங்களில் கழிவுகளை எரித்தால், அவர்கள் சுற்றுச்சூழல் இழப்பீடாக 5ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் மொத்தமாக கழிவுகளை போட்டு எரித்தால்.25 ஆயிரம் ரூபாயும்  அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று 2016–ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ட திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios