Asianet News TamilAsianet News Tamil

Modi 3.0 : மோடியின் அமைச்சரவை.. ஆந்திராவிலிருந்து களமிறங்கும் 3 அமைச்சர்கள்.. யாருப்பா அவங்க? ஒரு பார்வை!

Narendra Modi Cabinet : இன்று ஜூன் 9ம் தேதி பிரதமர் மோடி அவர்கள் நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Narendra modi Cabinet three main ministers representing andhra pradesh ans
Author
First Published Jun 9, 2024, 9:18 PM IST | Last Updated Jun 9, 2024, 9:18 PM IST

இன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவரோடு இணைந்து என்டிஏ கூட்டணியை சேர்ந்த அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்கள் அனைவரும் பதிவேற்றனர். இந்த சூழலில் ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து இரு அமைச்சர்களும் ஆந்திராவின் பாஜக எம்பி ஒருவரும் பதவி பிரமாணம் ஏற்றனர். தற்பொழுது அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம். 

பூபதி ராஜு சீனிவாச வர்மா : ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை பாஜக எம்பியாக இவர் இப்பொழுது மத்திய அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். நரசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வர்மா, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 2.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

பிரதமராக பொறுப்பேற்றார் மோடி.. இளம் அமைச்சர் முதல் வயதான அமைச்சர் வரை.. முழு பட்டியல் இதோ..!

சந்திரசேகர் : ஆந்திராவின் குண்டூர் பகுதியில் இருந்து முதல்முறையாக எம்பியாக தேர்வாகி இருப்பவர் இவர். 48 வயதான சந்திரசேகர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் இம்முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர். காரணம் இவருடைய குடும்ப சொத்து மதிப்பு மட்டும் சுமார் 5,700 கோடி ரூபாய். இந்த தகவல் அவருடைய பிரமாண பத்திரத்திலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். 

ராம் மோகன் நாயுடு : தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக எம்பியாக தேர்வாகி இப்பொழுது மோடியின் அமைச்சரவையில் இருக்கின்ற மிகவும் இளம் மத்திய அமைச்சராக மாறி இருக்கிறார் ராம்மோகன். 36 வயது மட்டுமே நிரம்பிய இவர் ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு தனது 26வது வயதில் எம்பியாக தேர்வானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Modi : இன்று அமையும் பிரதமர் மோடியின் அமைச்சரவை.. இணையமைச்சர் பதவி.. நிராகரித்த அஜித் பவார் - முழு விவரம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios