ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமில்லை… நரேந்தி மோடி விளக்கம்..
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன. எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கியது.
மத்திய அரசின் திட்டமிட்ட கொள்ளைதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார். இப்பிரச்சனை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் தவிர வேறு சிந்தனை இல்லை என்றார். 2ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல்களில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சிக்கு கறுப்புப் பண நடவடிக்கை குறித்து என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார்.
பொருளாதாரத்தை துய்மைப்டுத்தவே கடுமையான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும் நரேந்திர மோடி விளக்கம் அளித்தள்ளார்
