500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசும்போது,

மத்திய அரசின் அறிவிப்பால் கள்ளப்பணம் ஒழியவில்லை. விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட 100 கோடிக்குமேற்பட்ட மக்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்றும், ரூபாய் நோட்டின் மதிப்பு குறைந்ததற்கு மோடிதான் காரணம் என்றும், இதற்கு நாடாளுமன்றத்தில் வந்து பதில் சொல்ல பிரதமர் ஏன் தயங்குகின்றார் என்று கேள்விஎழுப்பிய அவர், பிரதமர் மோடியின் சாயம் வெளுத்தது விட்டதாக தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பணத்திற்கு ஆதரவு தரவில்லை. ஆனால், இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கக்கூடாது என்றும், எனவே தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர், மோடிக்கு நாட்டை ஆள தகுதி இல்லை என என தெரிவித்தார்.
