narayanasamy meeting modi in delhi

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரத்துக்கு மீறி செயல்படுவதாக பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் புகார் அளித்துள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 பிரதமரரையும், உள்துறை அமைச்சரையும் சந்திக்க புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் முன் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு செயல்பட்டு வருவதாகவும், புதுச்சேரி மாநிலத்தில் துணை ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மாநில அரசின் அன்றாட நிர்வாகத்திற்குள் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு உரிமை கிடையாது எனவும், இது தொடர்பாக அவரிடம் நேரில் பலமுறை கூறி விட்டதாகவும் குறிபிட்டார்.

மேலும், கடிதம் மூலமும், அமைச்சர்கள் மூலமும் தெரிவித்து உள்ளதாகவும், ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரத்துக்கு மீறி செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இது குறித்து பிரதம மந்திரியிடமும், உள்துறை அமைச்சரிடமும் புகார் செய்துள்ளதகவும் நாராயணசாமி தெரிவித்தார்.