* தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி விஜயலட்சுமி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார், முப்பதாயிரம் ரூபாய் லஞ்சப்பணம் பறிமுதல்: செய்தி. (என்னாங்க சார் கொடுமை இது!?  தொழிலாளர்கள் நலமாக இருக்குறதுக்கு ஒரு துறை இருக்குது, அதுலதான் அந்தம்மா வேலை பார்க்கிறாங்க. அவங்க நலமா! சுகமா! ஏகபோகமாக! இருக்குறதுக்காகதானே பணம் வாங்கினாங்க. கடமையை செய்யுறது எப்படிங்க குத்தமாகும்?)

* நமோ ஆப்!  பயன்படுத்துங்க. இதன் மூலமாக நம்ம கட்சியின் செயல்பாடுகள், தன்னார்வலர்கள், கட்சி தொடர்பான செய்திகளை பாருங்க. இந்த ஆப்!-ஐ மற்றவர்களுக்கும் பகிருங்க, மக்களை அதை பார்க்கச் செய்யுங்க: நரேந்திர மோடி. (தலீவரே நீங்க சொன்னதை மக்கள் கையில சொன்னோம். அதுக்கு ‘ஏற்கனவே நமோ ஆப்பை நாங்களே எடுத்து  வெச்சுக்கிட்டு நாலரை வருஷமா படாதபாடு பட்டுனுகீறோம்! இப்போ மறுக்கா அதை வைக்க சொல்றீயே, கஸ்மாலம் என் கையில கிடச்ச கண்டம் பண்ணிடுவேன்.’ன்னு சொல்லி அட்டாக் பண்ண வர்றாங்க.)

* சென்னை, தஞ்சை என பேட்ட படம் ஓடும் இரண்டு தியேட்டர்களில் ரஜினியின் இரண்டு தீவிர ரசிகர்கள் தங்கள் காதல் திருமணத்தை நடத்தினர்: செய்தி. (இதுக்கு அஜித் ரசிகனுங்க பரவாயில்லப்பா. கட்-அவுட்டுக்கு பாலூத்துறேன்னு மேலே ஏறி கீழே வுழுந்து காலை மட்டும்தான் ஒடச்சுக்கினானுங்க.....(!???)

* இருபது தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் மட்டுமில்லை, அ.தி.மு.க.வும் பயப்படுகிறது. ஆனால் எந்த நொடியில் தேர்தல் வைத்தாலும் அதை எதிர்கொண்டு, அ.தி.மு.க.வின் டெபாசீட்டை காலி செய்து, முதலிடத்தை நாங்கள் பிடிப்போம்: தினகரன். (யண்ணே! உனக்கு தேர்தல்ல முதல் இடம் கிடைக்குதோ இல்லையோ, ஆனா நீ ஒரு சூப்பர் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுண்ணே! அசத்தப்போவது யாரு சீசன் -2 போனேன்னா ஒனக்குதான் ஃபர்ஸ்ட் பிரைஸே!)

* காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண்மையை அழித்துவிட்டு அவற்றை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வள பூமியாக மாற்ற மத்திய அரசு துடிப்பதை அனுமதிக்கவே முடியாது: வைகோ. (அண்ணே நீங்க அனுமதிச்சா என்ன, அனுமதிக்கலேன்னா என்ன? எல்லாத்துக்கு ஒங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டா அவிய்ங்க பண்றாய்ங்க. ஆனா ஒண்ணுண்ணே இப்படி பேசிப்பேசியே பாலிடிக்ஸ் பண்றதுல ஒங்கள மிஞ்ச இந்த கண்டத்துலேயே எந்த மண்டையுமில்ல.)