இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு ஒரு இன்ச் நீளம் கூட கிடையாது என பாஜக முன்னாள் அமைச்சர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநில மாஜி அமைச்சர் ஈஸ்வரப்பா சிமோஹா கலவரத்தில் காயமடைந்த இளைஞரை சந்தித்த பின்னர் இவ்வாறு கூறினார். 

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு ஒரு இன்ச் நீளம் கூட கிடையாது என பாஜக முன்னாள் அமைச்சர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநில மாஜி அமைச்சர் ஈஸ்வரப்பா சிமோஹா கலவரத்தில் காயமடைந்த இளைஞரை சந்தித்த பின்னர் இவ்வாறு கூறினார். பலரும் அவரின் இந்த பேச்சை கண்டித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

2014 ஆண்டு மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் பாஜகவினர் மத துவேஷங்களில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளது, இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுவருகிறது. ஆனால் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் சட்டத்துக்கு எதிராக மிகத் தீவிரமாக போராடி வருகின்றனர். பசுவின் பெயரால் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது, தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இடையிடையே பாஜகா ஆர்.எஸ்.எஸ் தீவிர சித்தாந்தவாதிகள் இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்பை உமிழும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது, அந்த வரிசையில் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈஸ்வரப்பா இஸ்லாமிற்கு எதிராக இதுபோன்று பேசுவது இது முதல்முறை அல்ல, ஏற்கனவே பலமுறை இப்படி பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சுதந்திர தினத்தன்று கர்நாடக மாநிலம் சிவமோஹா நகரில் ஹமீர் அகமது என்ற பகுதியில் இந்து இயக்கத்தினர் பொது இடங்களில் சாவர்க்கர் பேனர்களை வைத்துள்ளனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் அங்கு திப்புசுல்தான் பேனர்களை வைத்ததாக தெரிகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது பின்னர் அது கலவரமாக மாறியது, அதில் இந்து இயக்கத்தைச் சேர்ந்த பிரேம் சிங் என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது, அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளரை சந்தித்து அவர் இந்தியா என்பது முழுக்க முழுக்க ஹிந்துஸ்தான், இந்த நாட்டில் இஸ்லாமியர்களுக்கு ஒரு இன்ச் நிலம் கூட கிடையாது என்றார்.

அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அவர் அமைச்சராக இருந்தபோது நாட்டின் மூவண்ணக்கொடி ஒருநாள் காவிக்கொடியாக மாறும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்த வரிசையில் அவர் கூறியுள்ள கருத்து பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அவர் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. சிவமோஹாவில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.