அதிர்ச்சி !! ராவணன் உருவபொம்மை சரியாக எரியாததால் நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்... எங்கு தெரியுமா..?

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி நகராட்சியில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவம் சரியாக எரியாததால், அலட்சியமாக செயல்பட்டதாக கூறி நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
 

Municipal clerk suspended after Ravana statue didn't burn properly on Dussehra in Chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி நகராட்சியில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவம் சரியாக எரியாததால், அலட்சியமாக செயல்பட்டதாக கூறி நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:இலங்கை தொடர்பான தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியா... காரணம் இதுதான்!!

தாம்தரி மாவட்டத்தில் புதன்கிழமை தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது இரவு நடைபெற்ற ராவண வதத்தில் ராவணின் பத்து தலைகளும் சரியாக எரியாமல் இருந்துள்ளது. இதுக்குறித்து புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் அந்நிகழ்ச்சியில் தாம்தரி நகராட்சி நிர்வாகம் சார்பில் ராவணன் உருவபொம்மை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் படிக்க:21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்... சும்மா கெத்தா... மாஸா.. குஜராத் CM ஆக பதவியேற்ற மோடி.. புகைப்படம் வைரல்

அதற்கு நகராட்சி எழுத்தரான ராஜெந்திர யாத்வ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தசரா கொண்டாத்திற்கான ராவணன் உருவ பொம்மை ஏற்பாடு செய்வதில் காட்டிய அலட்சியம் காரணமாக நகராட்சி ஊழியர் ராஜேந்திர யாதவ் என்பவரை சஸ்பெண்ட் செய்து நகராட்சி ஆணையர்  உத்தரவிட்டுள்ளார்.மேலும் அவரது அலட்சியத்தால் நகராட்சி நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆணையர் தெரிவித்துள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios