நள்ளிரவில் திறந்துவிடப்பட்ட முல்லைப் பெரியாறு அணை…. அலறி அடித்து ஓடிய பொது மக்கள்….
தென்மேற்குபருவமழைதீவிரமடைந்து, கேரளாவில்தொடர்ந்துகனமழைபெய்துவருவதால்இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடுஆகியமாவட்டங்கள்மிகமோசமாகபாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளபாதிப்பினால்சுமார்ரூ.8 ஆயிரம்கோடிஅளவுக்குசேதம்ஏற்பட்டுள்ளதாகமாநிலஅரசுஅறிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில்இல்லாதஅளவுக்குஅங்குமழைபெய்துவருகிறது. இதன்காரணமாகஒரேநேரத்தில் 22 அணைகள்திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்துபெய்துவரும்கனமழைகாரணமாகமுல்லைப்பெரியாறுஅணைக்குவரும்நீரின்அளவுஅதிகரித்துள்ளது. அணைக்கு 35 ஆயிரம் கனநீர் வந்து கொண்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவலை 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். இப்போது அணையின் நீர்மட்டம் 139 அடிக்கு உயர்ந்துள்ளது. ஆனால் கனமழை காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையைத் திறநது விடுவது என அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு முல்லைப்பெரியாறுஅணைதிறந்துவிடப்பட்டது. விநாரக்கு 4500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் கரையோரத்தில் வசிக்கும் பொது மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தற்போது இடுக்கிமாவட்டத்தில்வசிக்கும்ஆற்றங்கரையோரமக்களுக்குமாவட்டஆட்சியர்வெள்ளஅபாயஎச்சரிக்கைவிடுத்துள்ளார். தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பெரியாற்றங்கரையோர மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர், ஒரு சிலர் தற்போது வீடுகளை காலி செய்து வருகின்றனர்
