Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் கழிப்பறை கட்டாத அரசு ஊழியர் டிஸ்மிஸ்…மத்திய பிரதேச மாநில பஞ்சாயத்தில் அதிரடி தீர்ப்பு…

MP villagae panchayat no toilet no job
mp village-panjayat-decition
Author
First Published May 10, 2017, 8:55 AM IST


அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டில் கழிப்பறை இல்லையென்றால், அவர்கள் பணியில் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள  ஒரு பஞ்சாயத்து நிர்வாகம், அதிரடியாக  உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர்  சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பாஜக  ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தை திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் முயற்சியில், அதிகாசிகள் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில், ராய்சென் மாவட்ட கிராமப் பகுதிகளில், திறந்தவெளி கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களிடையே வீடுகளில் கழிப்பறை கட்டுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதனிடையயே ராய்சென் மாவட்டத்தை, அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் ., திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், துணை தலைவர்கள் மற்றும் தலைவர்கள், வீடுகளில் கட்டாயம் கழிப்பறை கட்டி பயன்படுத்த வேண்டும்; இல்லையென்றால், அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், கிராம பஞ்சாயத்து அளவில் செயலர், கிராம வேலை வாய்ப்பு உதவியாளர், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள், விவசாய துறை ஊழியர்கள் மற்றும் மதிய உணவு திட்ட ஊழியர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் போன்ற அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை இல்லை என்றால், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios