Asianet News TamilAsianet News Tamil

ஏழைகளை கு ஷிப்படுத்தும் மகிழ்ச்சித் துறை…மத்திய பிரதேசத்தில் அறிமுகம்…

mp happy-department
Author
First Published Jan 5, 2017, 7:26 AM IST


ஏழைகளை கு ஷிப்படுத்தும் மகிழ்ச்சித் துறை…மத்திய பிரதேசத்தில் அறிமுகம்…

இந்தியாவில்  முதல் முறையா ‛மகிழ்ச்சித் துறையை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய பிரதேச அரசு அத்துறையை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மகிழ்ச்சித் துறை என்ற ஒருதுறையை மத்திய பிரதேச மாநில அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.

ஏழ்மையில் வாடும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள், அதற்கு தகுதியான நபர்களுக்கு சென்று சேர்வதற்காகவே இத்துறை உருவாக்கப்பட்டுள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். 

மகிழ்ச்சி துறை  மூலம் உதவி செய்ய விரும்புபவர்கள் இத்துறையை தொடர்பு கொண்டு தகவல் அளித்தால் அந்த உதவி தேவைப்படும் தகுதியான நபருக்கு உதவி கிடைக்க வழி வகை செய்யப்படும்.இந்த சேவையை அரசு இலவசமாக செய்து வருகிறது.

இந்நிலையில் மகிழ்ச்சித் துறையை மாநிலம் முழுவதிலும் உள்ள 51 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

உதவிகள் தேவைப்படுவோருக்கு பயன் கிடைக்கச் செய்யும் வகையில் மகிழ்ச்சி துறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் மகிழ்ச்சியும் உறுதி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற இதுவரை 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாகவும் சவுகான் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios